ஆக்ஸிஸ் வங்கியில் மீண்டும் ஷிகாவா? எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

  முத்துமாரி   | Last Modified : 03 Apr, 2018 07:21 am


ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஷிகா சர்மாவின் பதவிகாலத்தை நான்காவது முறையாக நீட்டிப்பதை மறு பரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ஷிகா சர்மா பதவி வகித்து வருகிறார். இவருக்கு இதுவரை 3 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஷிகா சர்மா தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்த பதவியில் உள்ளார். இந்நிலையில் அவரது பதவிக்காலத்தை 4வது முறையாக மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டிக்க ஆக்ஸிஸ் வங்கி முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவை பரிசீலனை செய்யுமாறு ஆக்ஸிஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியில் கடன் வழங்குதல், அசையா சொத்துக்களை மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றில் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையிலே ரிசர்வ் வங்கி இவ்வாறு கூறியதாக பேசப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close