மொபைல் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Apr, 2018 07:55 pm


மொபைல் போன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை தொட்டுள்ளது. 

மொபைல் போன்கள் உற்பத்தி குறித்து இந்திய செல்லுலர் கூட்டமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், மொபைல் உற்பத்தியில் வியட்நாமை பின்னுக்கு தள்ளி இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாகவும், சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும் செல்போன் உற்பத்தியாளர் சங்கம்  தெரிவித்துள்ளது. தற்போது உலகில் உற்பத்தியாகும் செல்போன்களில் 11% இந்தியாவில் உற்பத்தியாவதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி  30 லட்சமாக இருந்தது. 2017-ம் ஆண்டில் இந்த் உற்பத்தி 1.1 கோடியாக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொபைல் போன்கள் உற்பத்தியை 50 கோடியாக உயர்த்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மொபைல் போன்களின் உற்பத்தியை அதிகரிததன் விளைவாக பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் செல்ஃபோனின் அளவு இந்தியாவில் குறைந்துள்ளதாக இந்திய செல்லுலர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close