வாட்ஸ் அப் அப்டேட்; வாய்ஸ் மெசஜ் இனி இப்படி அனுப்பலாம்!!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Apr, 2018 06:28 pm


ஒரு நாளைக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் தற்போது புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

பலரின் ஸ்ட்மார்போன் பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப்பிலே தான் களிக்கப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்னும் சிலர் ஸ்மார்ட்போன் வாங்குவதே வாட்ஸ அப்காக தான் என கூறுவது உண்டு. அந்த அளவிற்கு நம்மை வாட்ஸ் அப் ஈர்த்துள்ளது எனலாம். ஆரம்பத்தி எஸ்எம்எஸ் செயலியாகவே களமிறங்கிய வாட்ஸ் அப், இளைஞர்கள் அடிமையாவதை பயன்படுத்தி கொண்டு தினம் தினம் புதிய அப்டேட்டுகளை வெளிவிட தொடங்கியது. இந்த நிலையில் தபிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தினந்தோறும் புதுப்புது அப்டேட்களை வழங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பின் வாய்ஸ் மெசெஜில் பல புதிய அப்டேட்டுகளை வழங்கியுள்ளது. 


அதாவது நாம் மற்றவர்களுக்கு டைப் செய்து தகவல்களை பறிமாறி கொள்வது போன்று வாய்ஸ் மெசேஜ் என குரலை பதிவு செய்து அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதன்படி வாட்ஸ் அப்பில் டைப் செய்யும் இடத்தின் வலது புறத்தில் ஒரு மைக் போன்ற ஆடியோ ரெகார்ட் ஐகான் இருக்கும் அதை அழுத்தி பிடித்து குரலை பதிவு செய்து பின் வலப்புறம் நோக்கி பிரஸ் செய்தால் நம் குரல் பதிவு அனுப்ப வேண்டிய நபருக்கு செல்லும். நம் குரல் பதிவு செய்யும் வரை கையை ரெகார்ட் ஐகானில் இருந்து எடுக்கக்கூடாது. இந்த வசதி பெரும் பயனர்கள் மத்தியில் குறையாக கருதப்பட்ட நிலையில் தற்போது புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசெஜ் செய்ய விரும்பினால், அந்த ரெகார்ட் ஐகானை தொட்டவுடன் லாக் என்ற குறியீடு தென்படும் அதை ஒருமுறை அழுத்தி விட்டு நீங்கள் குரலை பதிவு செய்யலாம். குரல் பதிவு முடிந்தவுடன் மீண்டும் அந்த லாக் பட்டனை அழுத்தினால் நாம் பேசியது பதிவு செய்யப்பட்டிருக்கும் பின் அதனை அனுப்ப வேண்டிய நபருக்கு அனுப்பலாம் இதுவே புதிதாக களமிறங்கியிருக்கும் வாட்ஸ் அப் அப்டேட். இந்த வசதி தற்போது முன்னோட்டமாக பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் அப்டேட் செய்யபப்டும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close