சம்மர் ஸ்பெஷல்: ஐரோப்பா டூர் போலாம் ஈஸியா! ஒரு நாளைக்கு 78 யூரோதான்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Apr, 2018 01:23 pm

கோடை விடுமுறை வந்துவிட்டது. எல்லோரும் ஊட்டி, கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்ல பிளான் போட்டுக்கொண்டிருப்போம். லீவ் விட்டு சில நாட்கள்தான் ஆகிறது, அதற்குள்ளாக ஊட்டி, கொடைக்கானலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி வேறு... 

ஊட்டி, கொடைக்கானல் விட்டால் சிம்லா, மணாலி என்று வட இந்தியாவுக்குச் சுற்றுலா செல்வோம். அதைத் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் நமக்கு அலர்ஜி... வெளிநாட்டுக்குப் போகனும்னா பணக்காரங்களால மட்டும்தான் போக முடியும் என்ற தாழ்வு மனப்பான்மை நமக்குள் இருக்கிறது. கொஞ்சம் திட்டமிட்டால் ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பமும் ஐரோப்பாவுக்கே டூர் போக முடியும் என்கிறார் டிராவல் எக்ஸ்எஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேர்ந்த ஜவகர். 

உள்நாட்டு, வெளிநாட்டு டூர் பிளானரான ஜவகரிடம் கோடை விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான வழிமுறைகள் குறித்துக் கேட்டோம்... 

"இன்றைக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஐரோப்பிய நகரங்களுக்குச் சென்னையில் இருந்தே நேரடி விமானச் சேவை கிடைக்கிறது. கொஞ்சம் திட்டமிட்டோம் என்றால், ஒவ்வொரு கோடைக் காலமும் நம்முடைய வாழ்வில் என்றைக்குமே மறக்க முடியாத வசந்த காலமாக மாறிவிடும். 

வெளிநாடு பயணம் செல்லும்போது பேக்கேஜ் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. இதன்மூலம், 10 - 20 பேராகச் சேர்ந்து செல்லும்போது செலவுகள் குறையும். இன்றைக்கு ஒரே குடும்பத்தினரோ, நண்பர்களையோ ஒன்று சேர்க்க முடியாத நிலையில் நாங்களே, குடும்பத்தின் தனிமை, சுதந்திரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குழு பயணத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். 


சுற்றுலா ஏற்பாட்டிலேயே தொடர்ந்து இருப்பதால், வெளிநாட்டு ஹோட்டல்கள், டிராவல்ஸ் உள்ளிட்டவற்றுடன் நல்ல பழக்கம் உள்ளது. எந்த இடத்துக்கு எந்தக் காலத்தில் சென்றால் நன்றாக இருக்கும். எங்கு என்ன மாதிரியான உணவு கிடைக்கும். என்ன என்ன வசதிகள் அருகில் உள்ளன என்பது எல்லாம் தெரிந்திருப்பதால், அதற்கு ஏற்ற வகையில் சுற்றுலா திட்டங்களை வகுக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கும் குறைவான செலவில் நிறைவான பயண அனுபவத்தைத் தர முடிகிறது. குழு பயணம் என்பது நாங்கள் திட்டமிடும் தேதியில் நடைபெறுவது. இதுவே, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என 10 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், அவர்களுக்குச் சௌகரியமான தினத்தில் சுற்றுலா ஏற்பாட்டையும் செய்து தருகிறோம். 

இந்த முறையில் கோடை சுற்றுலாவாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால், உங்களுக்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு 78 யூரோதான் செலவாகும். இதிலேயே உணவு, தங்குமிடம், பயணச் செலவும் அடங்கிவிடும். இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், லக்சம்பெர்க், பிரான்ஸ், இத்தாலி, சுவிச்சர்லாந்து என ஐரோப்பாக முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம். இதற்கு எனப் பிரத்தியேக பேக்கேஜ் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆன்லைன் புக்கிங் இன்று நமக்கு எல்லாவித சௌகரியத்தையும் அளிக்கிறது. ஆனால், பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். இந்த வேகமான உலகில் யாருக்கும் தங்களுக்கு நெருக்கமான உறவுகளுடன் பொழுதை கழிக்க நேரமில்லை. இப்படி உள்ளவர்களுக்காகவே நாங்கள் பிரத்தியேக, தொந்தரவுகள் இல்லாத சுற்றுலா சேவையை அளிக்கிறோம். ஆன்லைனில் ஃபிளைட் டிக்கெட் புக் செய்வது, ஹோட்டல் ரூம் புக் செய்வதுடன் எல்லாம் முடிந்துவிடுவது இல்லை. ஏர்போர்ட் கட்டணம், மற்ற பயணச் செலவு, உள்ளுர் உணவு என ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. இவற்றை எல்லாம் கவனித்து, சௌகரியமான பயண அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்" என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.