ரூ.2000 நோட்டு தட்டுப்பாடுக்கு ரிசர்வ் வங்கி தான் காரணம் - அதிகாரிகள் குற்றச்சாட்டு!

  Padmapriya   | Last Modified : 17 Apr, 2018 04:53 pm


ரிசர்வ் வங்கி போதிய அளவுக்கு, ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் தாமஸ் ஃப்ராங்கோ ராஜேந்திர தேவ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு,  ரூ.2000 நோட்டுகளை சப்ளை செய்வதில்லை. இதனால், வங்கிகளில் நெருக்கடி நிலவுகிறது. வங்கிகளில் இருந்து எடுத்த, ரூ.2000 நோட்டுகளை, வாடிக்கையாளர்கள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர். வங்கியில் வேறு நோட்டுகள் வழங்க முடியாததால், வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. 

வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக தான் உள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு, வாரா கடன் குறித்து, 2016-ல் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை இடம்பெற வழி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close