ஜிஎஸ்டி மூலம் ரூ.7.41 லட்சம் கோடி அள்ளிய மத்திய அரசு!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 09:06 pm


கடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூ. 7.41 லட்சம் கோடி வரி வருவாய் பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அந்த மாதத்தில் இருந்து 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதன்படி கடந்த 8 மாதங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை ரூ.41,147 கோடியாகும். மாநிலங்களுக்கு உள்ளாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் வருவாய் மத்திய அரசுக்கு மதிப்பு மொத்தம் ரூ.1.19 லட்சம் கோடி என்றும் மாநில அரசுக்கு ரூ.1.72 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.3.66 லட்சம் கோடி என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close