ரூ.1 லட்சம் கோடி கொடுத்து ஃபிளிப்கார்ட்டை வாங்கியது வால்மார்ட்!

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 07:30 pm


முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்தியாவில் தற்போது ஆன்லைன் வர்த்தகம் அபரீத வளர்ச்சி கண்டு வருகிறது. முன்னணி நிறுவனங்களாக அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் அமேசான், வாடிக்கையாளர்ளை கவரும் வகையில் பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இதையடுத்து சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாஃப்ட் வங்கி, ஏற்கனவே 20% பங்குகளை வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி இடத்தினை பிடிக்கும் பொருட்டு ஃபிளிப்கார்ட்டின் பெரும்பாலான பங்குகளை  வால்மார்ட் வாங்க இருப்பதாக அறிவித்த நிலையில் நேற்று (மே.8) இரவு அது உறுதி செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை சாஃப்ட் வங்கியின் தலைமை அதிகாரி மசயோஷி சன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது. இதன்மூலம் ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை 1.04 லட்சம் கோடி ரூபாய்(16 பில்லியன் டாலர்) கொடுத்து வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய வர்த்தகமாக இது பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close