கூகிளில் 1 கோடி ரூபாய் சம்பளம் பெறும் இந்தியப் பெண்!

  கனிமொழி   | Last Modified : 10 May, 2018 04:17 pm


பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் மதுமிதா ஷர்மா. 25 வயதாகும் இவர் சுவிட்சர்லாந்திலுள்ள கூகுள் நிறுவன தொழில்நுட்பப் பிரிவில் பொறியாளராகப் பதவியேற்றுள்ளார். இதற்காக இவர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் வருடத்திற்கு 1 கோடி ரூபாய்.  

7 சுற்றுகள் கொண்ட நேர்க்காணலில் எல்லாவற்றையும் க்ளியர் செய்த பிறகே, மதுமிதாவுக்கு இந்த வேலைக் கிடைத்திருக்கிறது. பாட்னாவில் இருக்கும் டி.ஏ.வி பள்ளியில் படித்த இவருக்கு அடுத்து இன்ஜினியரிங் படிக்க ஆசை. ஆனால் ஆர்.பி.எஃப்பில் உதவி பாதுகாப்பு கமிஷனராக இருக்கும் மதுமிதாவின் தந்தைக்கு இன்ஜினியரிங் பெண்களுக்கான துறை இல்லை என்ற எண்ணம் தான் முதலில் இருந்திருக்கிறது.

ஆனால் நாளடைவில் பெண்கள் அதிகளவில் இன்ஜினியரிங் படிப்பதைப் பார்த்து ஒரு மனதாக மதுமிதாவிற்கும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். ஜெய்பூரில் பி.இ பட்டம் பெற்ற மதுமிதாவுக்கு பல நிறுவனங்கள் வேலை வழங்க போட்டிபோட்டன. பெங்களுரு காக்னிசன்ட் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.  

அப்போது, அமேசான், மைக்ரோசாஃப்ட், மெர்சிடெஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் இருந்தும் மதுமிதாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. கூகுள் நிறுவனமும் அழைப்பு விடுத்தது. கூகுள் அவரது கனவு நிறுவனம் என்பதால் நேர்காணலுக்குச் சென்றாராம். நேர்க்காணல் அனுபவத்தை தன் தந்தையிடம் பகிர்ந்துக் கொண்ட மதுமிதா, தான் கற்றுக் கொள்ள கூகுள் பக்க பலமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அதனால் தனது கனவு கம்பெனியான கூகிள் நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close