ப்ளிப்கார்ட் வால்மார்ட் டீல்; வருமான வரித்துறை ஆய்வு

Last Modified : 14 May, 2018 04:37 am


இந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டை,, அமெரிக்க சூப்பர்மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட் வாங்கியதில் ஏதும் விதிமீறல்கள் நடந்துள்ளதா என வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

சர்வதேச அளவில் இணைய வர்த்தகத்தில் கோட்டை கட்டி பறக்கும் அமேசான் நிறுவனத்துக்கு இந்தியாவில் கடும் போட்டி கொடுத்து வந்த ப்ளிப்கார்ட் தற்போது வால்மார்ட் நிறுவனத்தின் வசம் சென்றுள்ளது. சுமார் 16 பில்லியன் டாலர் மதிப்பில் நடந்து முடிந்துள்ள இந்த டீலை தொடர்ந்து, ப்ளிப்கார்டின் 77% பங்குகள் வால்மார்டுக்கு விற்கப்பட்டது.

பெரிய அளவில் புருவங்களை உயர்த்திய இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை தற்போது இந்திய வருமான வரித்துறை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இதனால் இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச விதிமுறைகள், இந்திய சட்டங்கள், எல்லாம் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க வருமான வரித்துறை ஆவணங்கள் கோரியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close