19 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 08:46 am

19 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம் அடைந்து வந்த நிலைியல் கடந்த 19 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது. கர்நாடக தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக பலதரப்பில் இருந்து புகார் எழுந்தது. ஆனால் பொதுமக்களின் நலன் கருதியே விலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலைியல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசு உயர்ந்து ரூ.69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close