இனி ஹார்லி டேவிட்சன் பைக் வாங்குவது ஈஸி!

  கனிமொழி   | Last Modified : 15 May, 2018 04:03 am


பல இளைஞர்களின் கனவு பைக்காக இருப்பது ஹார்லி டேவிட்சன் பைக். அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 27 ஷோரூம்களைக் கொண்டுள்ளது. ரூ.8 லட்சம் முதல் 50 லட்சம் வரை பல்வேறு சொகுசு மாடல்களைக் கொண்ட பைக்குகள் இவர்களிடம் இருக்கின்றன. 

தற்போது பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் கார்களுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை உணர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையில் இறங்கி விட்டது. 

இதனைத் தொடர்ந்து தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் களமிறங்க இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் இந்த விஷயத்தைக் கூறி சோதனை முயற்சியில் இறங்கவும் டேவிட்சன் நிறுவனம் தயாராகிவிட்டது. 

இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக்கன்ஸி, "பயன்படுத்தப் பட்ட பைக் விற்பனைத் திட்டம் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட விற்பனை மையங்களில் சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறோம். நாடு முழுவதும் இந்த விற்பனை சீக்கிரம் அறிமுகப் படுத்தப்படும்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close