இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அசூர வளர்ச்சி!

Last Modified : 17 May, 2018 03:36 pm

இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாக இன்டர்நேஷனல் டேடா கார்ப்பரேஷன் இந்தியா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி இருக்கிறது. இந்த நிறுவனம் மட்டுமே ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 30 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங், விவோ உள்ளிட்டவை வருகின்றன.

அதிலும் குறிப்பாக 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஒவ்வொரு காலாண்டிலும் 50 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரிப்பதாகவும், மிகக் குறைந்த விலையில் டேடா பிளான் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஸ்மார்ட்போன் விற்பனை ராக்கெட் வேகத்தில் செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close