ரூ.80-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 10:00 am

இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.13 ஆக உயர்ந்துள்ளது. 

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்தன. அதன் பிறகு தினம் தினம் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த வாரம் நடந்த கர்நாடக தேர்தல் காரணமாக ஏப்ரல் 24ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. பொதுமக்களின் நலன் கருதி விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தேர்தல் முடிந்து மே 14ம் தேதி முதல் மீண்டும் விலையில் மாற்றம் ஏற்பட துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ79.13ஆக உள்ளது. ரூ.80-ஐ நெருங்கிவிட்ட பெட்ரோல் விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ. 71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close