இந்தியா டு அமெரிக்கா வெறும் ரூ.13,499 தான்: வாவ் அதிரடி!

  Sujatha   | Last Modified : 21 May, 2018 08:17 am


ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த  'வாவ் ஏர்லைன்ஸ்' நிறுவனம்,  டெல்லியில் இருந்து வட அமெரிக்கா செல்ல வெறும் ரூ.13,499 கட்டணத்தில்  விமான சேவையை இயக்குகிறது.

இது குறித்து வாவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்குலி மொகன்சன் கூறியதாவது:  'வாவ் ஏர்லைன்ஸ்'  நிறுவனம், டெல்லியில் இருந்து ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் கெஃப்லாவிக் நகருக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் வகையில் இணைப்பு விமான சேவையை வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இருந்து தினம் சுமார் 20 ஆயிரம் அமெரிக்கா செல்கின்றனர். இவர்களில் 80% பேர் இணைப்பு விமானத்தில் செல்கின்றனர், அவர்களை டார்கெட் செய்வதே எங்களது நோக்கம் என்று அவர் தெரிவித்தார். 


வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் வாவ் ஏர்லைன்ஸ் தனது சேவையை இந்தியாவில் தொடங்கவுள்ளதாகவும், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா நாடுகளில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்கள் நிறுவனம் இந்தியாவிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் ஸ்குலி மொகன்சன் உறுதியளித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close