பணமதிப்பிழப்புக்கு பின் இரண்டு மடங்கான பணப்புழக்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jun, 2018 08:18 pm
demonetisation-impact-cash-with-public-doubles-since-note-ban

பணமதிப்பிழப்புக்கு பின் மக்களிடம் பணப்புழக்கம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய பணங்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை  அவகாசம் அளித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்களிடம் பணத்தட்டுப்பாடு அதிகரித்தது. வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட பணம் எடுக்க முடியாமல் திணறினர். அதன்பின் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ. 500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து ரூ. 10, ரூ.50, ரூ.100 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ஒரு மாதத்தில் ரூ.7.8 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் தற்போது ரூ.18.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு பின் ரிசர்வ் வங்கியால் புழக்கத்திற்கு விடப்பட்ட ரூ.8.9 லட்சம் கோடியானது தற்போது ரூ.19.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close