ரூ. 87ஆயிரம் கோடி நஷ்டத்தில் பொதுத்துறை வங்கிகள்... லாபம் பார்த்த இந்தியன் வங்கி!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 12:22 pm
public-sector-banks-log-rs-87-000-cr-loss-in-2018-financial-year

2017-2018 நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 87 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளின் கடந்த 2017-2018ம் ஆண்டுக்கான லாப-நஷ்ட விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் நஷ்டக் கணக்கையே காட்டியுள்ளன. இதில், வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடம் பிடித்துள்ளது. அந்த வங்கி 12,283 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளது. அந்த வங்கி 8,237.93 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும், நாட்டிலேயே மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்.பி.ஐ) கணிசமான இழப்பை சந்தித்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் இழப்பு 6,547.45 கோடி ரூபாய்.

பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய 2 வங்கிகள் மட்டுமே கடந்த நிதியாண்டில் லாபத்தை ஈட்டியுள்ளன. இந்தியன் வங்கி 1258.99 கோடி ரூபாயும்  விஜயா வங்கி 727.02 கோடி ரூபாயும் லாபத்தை ஈட்டியுள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close