ஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 06:29 pm
rbi-guv-asks-more-power-to-monitor-psb

பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று அதன் கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், நஷ்டம் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன் ரசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆஜரானார். அவரிடம் பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த அவர் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தேவை என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து உர்ஜித் படேலிடம் விரிவாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த உர்ஜித் படேல், “ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு கிளையிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க முடியாது” என தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 19 வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்தியன்  வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய இரு பொத்துறை வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளின் கடந்த ஆண்டு நஷ்டம் மட்டும் ரூ.87,300 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close