ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மே மாத வருவாய் 9 சதவீரம் வளர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 09:57 am
premium-collection-of-life-insurers-grows-9

கடந்த மே மாதத்தில் பிரிமியம் வருவாய் 9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.12,838 கோடி ஈட்டியுள்ளன. 

இந்தியாவில் உள்ள 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கடந்த மே மாதத்தில் ரூ.12, 838 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.11,801 கோடியாக இருந்தது. இந்தாண்டு 9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. 

இந்த துறையில் பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதன் பங்குகள், கடன்பத்திரங்கள் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. ஏராளமான நிதி ஆதாரத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தயாவின் மிகப்பெரிய நிதி நிறுவன முதலீட்டாளராக உள்ளது. 

கணக்கீட்டுக் காலத்தில் ஆயுள் காப்பீட்டு நிறவனங்கள் ஈட்டிய மொத்த புதிய பிரிமிய வருவாயில் எல்.ஐ.சியின் பங்கு 71.70 சதவீதம். அதாவது ரூ. 12, 838 கோடியில் எல்.ஐ.சீயன் பங்கு ரூ.9, 205 கோடி. இந்த வகையில் இந்நிறுவனம் 9.49 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 

இதர 23 தனியார் நிறுவனங்கள் புதிய பிரிமிய வருவாயாக ரூ. 3,633 கோடி ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது இது 7 சதவீதம் அதிகமாகும். அப்போது தனியார் நிறுவனங்கள் ரூ. 3,394 கோடி வருவாய் பெற்றுருந்த.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close