30 அமெரிக்க பொருட்களுக்கு சுங்க வரி 50 சதவீதம் அதிகரிப்பு

  Newstm News Desk   | Last Modified : 17 Jun, 2018 08:24 am

india-proposes-customs-duty-hike-on-30-us-products

30 வகையான அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ள நிலையில் இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரம் தங்களது நாடுகள் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிவிதிப்பை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறார். இந்த இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

அண்மையில் இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை 241 மில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்கா திடீரென அதிகரித்தது. இதனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் குறையும் நிலை ஏற்பட்டது. இதை ஈடுகட்டும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 30 வித பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி 800 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் உள்பட சுங்க வரி உயர்த்தப்படும் 30 வகையான பொருட்களின் பட்டியலை உலக வர்த்தக சபையிடம் இந்தியா அளித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close