காய்கறி இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 08:27 am
decrease-in-vegetable-import

டாலர் மதிப்பு அடிப்படையில், மே மாதத்தில் காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது. 

கடந்த மே மாதத்தில் 17.87 கோடி டாலருக்கு காய்கறி, பழங்கள் இறக்குமதி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 18.10 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் இறக்குமதி 1.29 சதவீதம் சரிந்து இருக்கிறது. 

இதே காலத்தில், ரூபாய் மதிப்பில் காய்கறி, பழங்கள் இறக்குமதி 3.48 சதவீதம் உயர்ந்துரூ. 1,207 கோடியாக அதிகரித்துள்ளது. இம்மாதத்துடன் நிறைவடையும் வேளாண் பருவத்தில் 30.72 கோடி டன் அளவிற்கு காய்கறிகளும், பழங்களும் உற்பத்தியாகும் என மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2016-17 பருவத்தில் உற்பத்தி 30.06 கோடி டன்னாக இருந்தது. ஆக, நடப்பு பருவத்தில் காய்கறி, பழங்கள் உற்பத்தி 2.2 சதவீதம் மட்டுமே உயரும் என வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு பருவத்தில், சுமார் 2.60 கோடி ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் அது 2.49 கோடி ஹெக்டேராக இருந்தது. ஆக, சாகுபடி பரப்பளவு 4 சதவீதம் விரிவடைந்து இருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி 2 மடங்கு உயர்ந்து 10,000 கோடி டாலரை எட்டும் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close