முடங்கிய ஜியோ! ஸ்தம்பித்த இளைஞர்கள்!! 9 மணி வரை ராகுகாலம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jun, 2018 08:37 pm
jio-sim-call-connection-shut-down

ஜியோ நெட்வொர்க்கில் இருந்து சில மணி நேரங்களாக வாய்ஸ் கால் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிபட்டு வருகின்றனர்

அன்லிமிடெட் இணைய சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் என இலவசங்களை அள்ளி கொடுக்கும் ஜியோ நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள். கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ நிறுவனம். மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை அண்டவிடாமல் அடுத்தடுத்து ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஜியோ நெட்வொர்க்கில் கடந்த சில மணி நேரமாக வாய்ஸ் கால் செல்லவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இணையதள சேவை பாதிக்கவில்லை என்றும் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குமுறிவருகின்றனர். மேலும் இன்று மாலையில் இருந்து ஜியோ சிம் நிறுவனத்தை பயன்படுத்துவோருக்கு சரியாக சிக்னல் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜியோ நிறுவனம், அழைப்பு சேவை சிக்கல் சில மணி நேரங்கள் தொடரும் என்றும் இரவு 9 மணிக்கு மேல் சரியாகும் என்றும் தெரிவித்துள்ளது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close