தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு ரூ. 6 கோடி அபராதம்

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 02:28 pm
rbi-imposes-60million-fine-on-tmb

விதிமுறைகளை மீறி பங்குகள் ஒதுக்கீடு செய்ததாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ. 6 கோடி அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி 2016ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக குழு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விதிமீறல் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய வழிமுறைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பின்பற்ற தவறியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தது. அதற்காக அந்த வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close