சுவிஸ் வங்கியில் உள்ள அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண்ஜேட்லி

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Jun, 2018 09:28 pm
all-money-deposits-in-swiss-banks-not-black-money-arun-jaitley

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் டெபாசிட் விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியர்களின் டெபாசிட் 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜேட்லி,  “சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. சிலர் நேர்மையான வழியில் பணத்தை சம்பாதித்து அங்கு சேர்த்து வைத்து இருக்கிறார்கள். மேலும் உள்நாட்டு இந்தியர்கள் பெரிய அளவில் டெபாசிட் செய்யவில்லை. அப்படியே சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும்” என்று கூறினார். 

முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 2019 ஆண்டு இறுதுக்குள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் கறுப்புபணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என கூறியது குறிப்பிடதக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close