4 முறை ஏலம் போகாத மல்லையா விமானம்: ரூ.35 கோடிக்கு வாங்கிய அமெரிக்க நிறுவனம்

  Padmapriya   | Last Modified : 30 Jun, 2018 02:52 pm

vijay-mallya-s-jet-finally-gets-a-buyer-auctioned-for-rs-35-crore

நிதி மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தங்கி இருக்கும் விஜய் மல்லையாவின் கார்பரேட் ரக சொகுசு ஜெட் விமானம் ரூ. 34.8 கோடிக்கு ஏலம் போனது. இதனை அமெரிக்க விமான நிறுவனம் விலைக்கு வாங்கியது. 

கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில், அவர் லண்டன் சென்றுவிட்டார். கடன் தொகையை வசூலிக்க முடியாத வங்கிகள், மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட்டு கடன் தொகையை வசூலித்து வருகின்றன.  மல்லையாவுக்கு சொந்தமான தனிப்பட்ட விமானத்தை ஏலம் விட, சேவை வரித்துறை முடிவெடுத்தது.  உலகளாவிய ஏலத்திற்கு இந்திய சேவை வரித்துறை சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு விடுத்தது. ஆனால் 3க்கும் மேற்பட்ட முறை ஏலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டும் மல்லையாவின் சொத்துக்களை சரியான விலையில் வாங்க யாரும் முன்வரவில்லை. வது முறை ஏலம் அறிவிக்கப்பட்டபோது ஒரு நிறுவனம் மட்டுமே அதில் பங்கேற்றது. 

இந்த நிலையில், மல்லையாவின் A319-133C VT-VJM MSN 2650 என்ற கார்ப்ரேட் ஜெட் விமானத்தை ($5.05 மில்லியன்)ரூ. 34.8 கோடிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனமான எல்எல்சி ஏலத்தில் எடுத்தது. இதற்கான ஏலம் ஆன்லைன் மூலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தின் ஆரம்பத் தொகையாக 1.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close