ஊட்டி மலை ரயில் பிடிக்குமா? - அப்போ கட்டாயம் படிங்க!

  திஷா   | Last Modified : 08 Jul, 2018 02:27 am
chaiyya-chaiyya-train-to-get-more-attractions

சுற்றுலா பயணிகளைக் கவர நீலகிரி மலை ரயிலுக்க புதிய சேவைகளை வழங்க தெற்கு ரயில்வே முடிவு.

தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் முதன்மையானது ஊட்டி. இங்கு மலை ரயிலும் ஸ்பெஷல். ரயில் பயணத்தின் போது இயற்கை அழகை ரசிப்பதற்காகவே இதில் பயணிக்க பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதோடு பல படங்களிலும் இந்த மலை ரயில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஷாருக்கான் நடித்த 'தில் சே' திரைப்படத்தில் வரும் 'சைய்ய சைய்ய' பாடல் இந்த ரயிலில் தான் படமாக்கப் பட்டது. தமிழில் 'உயிரே' என அந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு 'தைய்ய தைய்ய' என அந்தப் பாடல் மாற்றப் பட்டிருந்தது. முழு பாடலுக்கும் அந்த ரயில் மேல் நின்று நடனம் ஆடியிருப்பார் ஷாருக் கான். தவிர இந்த நீலகிரி மலை ரயில் பாதையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய களமாக 1995-ல் அறிவித்தது. 

தற்போது சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக, உதகமண்டலம் ரயில் நிலையத்தில்,கோச்சடேரியா எனப்படும் சிற்றுண்டி உணவகம் திறக்கப் பட இருக்கிறது. இப்போது மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவியில் இந்த ரயில் இயக்கப் படுகிறது. இனிமேல் இது உதகை வரையும் நீட்டிக்கப் பட உள்ளது. 

தவிர இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள், ரேக்குகள் என மொத்தம் 1.8 லட்சம் செலவில் இந்த ரயில் புதுப்பிக்கப் பட்டு வருகிறது. 

அதோடு பயணிகளின் வசதிக்கேற்ப, உதகமண்டலம், குன்னூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதியும் கொண்டுவரப் பட்டுள்ளது. மேலும், குன்னூர் முதல் ரன்னிமேடு வரையுள்ள எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ரவுண்ட் ட்ரிப் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் மகிழ்ச்சியாகி இருக்கின்றனர்வ் சுற்றுலா பயணிகள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close