தவறான பாதையில் இந்திய பொருளாதாரம்: அமர்த்தியா சென் பகீர்

  Padmapriya   | Last Modified : 10 Jul, 2018 12:04 am
india-has-taken-a-quantum-jump-in-the-wrong-direction-since-2014-amartya-sen

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாக உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு வென்றவருமான அமர்த்தியா சென் எச்சரித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் பேசுகையில், "இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சிப் போக்கில் இருந்தப் போதிலும், 2014-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் அது, மோசமான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், தெற்காசிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, பூட்டான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் சிறப்பான இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மோசமான நாடுகளின் பட்டியலில் உள்ளது.  பாகிஸ்தான் கூட முன்னேறிவிட்டது. அதாவது, இந்தியச் சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கு கூட உறுதியான நிலை இல்லாமல் இருக்கின்றனர்.  இருப்பிடம், சுகாதாரம், கல்வி ஆகிய அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றனர். 

முக்கியமாக சமூக நீதி சீர்கெட்டு இருக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில், சமீபத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஊழியரை கட்டி வைத்து அடித்தது போலான சம்பவங்களே சமூகத்தில் ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு உதாரணம்" என்று பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close