செப்டம்பர் முதல் புதிய ரூ.100 நோட்டு!

  Padmapriya   | Last Modified : 18 Jul, 2018 09:32 pm

new-100-rupee-note-could-be-violet-in-colour-says-report

ஊதா நிறத்திலான புதிய ரூ.100 நோட்டை வரும் செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது.  

புதிய ரூ. 100 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. செப்டம்பர் மாதம் வெளியாகும் இந்த நோட்டின் நிறம் ஊதா நிறத்தில், பழைய ரூ. 100 நோட்டைவிட அளவில் சிறயதாக இருக்கும், புதிய ரூ. 10 நாட்டைவிட்ட பெரியதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்த ரூபாய் நோட்டில் 11ஆம் நூற்றாண்டில் குஜராத்தில் கட்டப்பட்ட ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம்பெறும் என்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் தேவாஸ் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற அச்சகத்தில் அச்சடிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 

புதிய ரூ. 100 நோட்டுகள் வெளியிடப்பட்டாலும் புழகத்தில் உள்ள பழைய ரூ. 100 நோட்டுகள் திரும்பிப்பெறப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்8 ஆம் தேதி இரவு 12 மணிக்கு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக மத்திய அரசு அறிவித்தது. 
அதனைத் தொடர்ந்து புதிய ரூ. 2000, ரூ. 500 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. தொடர்ந்து புதிய ரூ.10 மற்றும் ரூ.50 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. புதிய ரூ.10 மற்றும் ரூ.50 நோட்டுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு பழைய நோட்டுகள் செல்லாது என்று வதந்திகள் பரவின. ஆனால் அவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பிப்பெறப்படவில்லை. இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.