வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி (ரெப்போ) விகிதம் 6.25 %லிருந்து 6.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி வீதம் தான் ரெப்போ ரேட். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்த ரெப்போ விகிதத்தை மாற்ற ஆலோசனை நடக்கும். அதன்படி மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக இருந்த நிலையில், 0.25% உயர்த்தப்பட்டு 6.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூன் மாதம் ரெப்போ விகிதம் 6.00% லிருந்து 6.25% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கும் நிலையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.