சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட 17 திரையரங்குகளை வாங்கியது பி.வி.ஆர்!

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 12:43 pm
pvr-purchases-satyam-16-other-multiplexes-for-rs-633-cr

சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட எஸ்.பி.ஐயின் 17 திரையரங்குகளை பி.வி.ஆர் நிறுவனம் ரூ.850 கோடிக்கு வாங்கியுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான பி.வி.ஆர், இந்தியா முழுவதுமே பல்வேறு திரையரங்குகளை கொண்டு இயங்கி வருகிறது. பெங்களூரூ, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட 60 நகரங்களில் 152 இடங்களில் 706 திரையரங்குகள் உள்ளன. 

அதேபோன்று தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்.பி.ஐ சினிமாஸ் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி என மொத்தமாக 0  நகரங்களில், 76 ஸ்க்ரீன்களை உள்ளடக்கிய 17 திரையரங்குகள் உள்ளன. சென்னையை பொறுத்தவரை பாலாஸ்ஸோ, எஸ்கேப், சத்யம் எஸ்2 பெரம்பூர், சத்யம் எஸ்2 தியாகராஜா, ராயப்பேட்டை சத்யம் என 5 திரையங்குகள் உள்ளன. 

சத்யம் சினிமாஸை வாங்குவதற்கு பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததையடுத்து, தற்போது இது ஒரு முடிவுக்கு வந்ததுள்ளது. அதன்படி சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட எஸ்.பி.ஐயின்  72% பங்குகளை பி.வி.ஆர் ரூ.850 கோடிக்கு வாங்கியுள்ளது. இதில், ரூ.633 கோடிபணமாக  கொடுக்கப்பட்ட நிலையில், மீதியுள்ள 28% தொகையை பங்குகள் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இது தவிர எஸ்.பி.ஐயின் 13 திரையரங்குகள் கட்டமானப்பணியில் உள்ளன. 

2020 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 1000 திரையரங்குகள் அமைப்பதே, பிவிஆர் நிறுவனத்தின் நோக்கம் என அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் பிஜிலி தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close