ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரிவியூ ஆஃபர் விரைவில்...3 மாதத்திற்கு இலவச சேவை!

  முத்துமாரி   | Last Modified : 04 Sep, 2018 04:55 pm
jio-gigafiber-to-offer-preview-offer-will-be-established-soon

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. தற்போது கோடிக்கணக்கான வாக்காளர்களை  கொண்டுள்ள ஜியோ, அதிரடி ஆஃபர்களை  தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை வெற்றி பெற்றதையடுத்து, அந்த வரிசையில் 'ஜியோ ஜிகா ஃபைபர்' என்ற அதிரடி ஒரு ஆஃபரை கொண்டு வரவுள்ளது. 

ஜியோ சேவை தொடங்கிய தினமான ஆகஸ்ட் 15ல் இருந்து இந்த இணைப்புக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. Myjio அல்லது jio.com ல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை சோதனை செய்யப்பட்ட பின்னர், தொடர்ந்து 1,100 நகரங்களில் ஏற்படுத்தப்படவுள்ளது.  உலகத்திலேயே மிக பிரமாண்டமாக 1,100 நகரங்களில் பைபர் பிராட்பேண்ட் ஏற்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

100 Mbps வேகத்தில் ரூ.699க்கு ஒரு மாதத்திற்கு 100GB வழங்கப்படும். அதன்பின்னரும் தேவைக்கேற்ப 40GB என்ற முறையில் டாப் அப் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 3 மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை அளிக்கப்படும். 

ரூ.4200 கொடுத்து இதற்கான வை-பை  உபகரணத்தை வாங்கிக்கொள்ளலாம். இதனை வீட்டில் செட் செய்து வீட்டில் உள்ள அனைவரும் உபயோகித்துக்கொள்ளலாம். இதற்கான ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close