வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பால் 2500 பேர் வேலையிழப்பு! 

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Sep, 2018 10:03 pm
vodafone-idea-s-10-billion-saving-plan-could-cost-2500-jobs

வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பால் 2500 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத்துறையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது.  தற்போது 18 ஆயிரம் பேர் வேலை பார்த்து வரும் நிலையில், செலவைக் குறைக்கும் விதமாக அடுத்த சில மாதங்களில் 2500 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலிடத்தை தக்க வைப்பதற்காக பதவி உயர்வு, ஊதிய உயர்வு நடப்பு வருடம் நிறுத்தி வைக்கப்படும் என மற்றொரு அதிகாரி கூறியுள்ளார். இரு நிறுவனங்கள் இணைப்பின் மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close