புதிய சேதமான 200, 2000 நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கெடுபிடி அறிவிப்பு 

  Padmapriya   | Last Modified : 09 Sep, 2018 07:46 pm
rbi-announces-new-rules-for-exchange-of-damaged-rs-2000-200-notes

கிழிந்த, சேதமடைந்த புதிய 200, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

200, 2000 ரூபாய் நோட்டுகளின் சேதத்தின் தன்மையைப் பொறுத்து மாற்று மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய ரூபாய் நோட்டுகளில் குறிப்பிட்ட அளவை விடக் கூடுதலாகவோ, குறைவாகவோ சேதம் ஏற்பட்டிருந்தால் பணம் திரும்பப் பெற முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  உயர்மதிப்புடைய 200 மற்றும் 2000 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியது. அமைச்சகத்தின் அனுமதியுடன் புதிய ரூபாய் தாள்கள் திரும்பப் பெறும் சட்டம் 2018ன்படி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

அதன்படி, 109.56 சதுர சென்டி மீட்டர் அளவைக் கொண்ட புதிய 2000 ரூபாய் தாள்களில் 88 சதுர சென்டி மீட்டர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருந்தால் முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். 44 சதுர சென்டி மீட்டரில் சேதமடைந்தால் பாதித் தொகை மட்டும் கிடைக்கும் என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதே போல, புதிய 200 ரூபாய் தாள்களில் 78 சதுர சென்டிமீட்டருக்குச் சேதமடைந்திருந்தால் முழுத்தொகையும் வழங்கப்படும். 39 சதுர சென்டி மீட்டருக்கு சேதமடைந்தால், பாதிப்பணம் மட்டுமே திரும்ப அளிக்கப்படும். கூடுதலாகச் சேதமடைந்திருந்தால் பணத்தை மாற்ற முடியாது.

50 ரூபாய் மற்றும் அதற்கும் கூடுதலாக மதிப்பைக் கொண்ட ரூபாய் தாள்களை மாற்றும்போது, கிழிபடாத பகுதிகளின் பெருமளவை ஒப்படைக்க வேண்டும் என்றும் அதன் தன்மைக்கு ஏற்ப மாற்று மதிப்பு வழங்கப்படும் என்பனவாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newstm.in -

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close