மீண்டும் சரிவு: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.91ஆனது!

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2018 01:47 pm

rupee-inching-closer-to-73-mark

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 22 பைசா சரிவடைந்து ரூ.72.91ஆக வீழ்ச்சியடைந்தது. 

டாலருக்கு நிகரான பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதே போல இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் அந்நிய நேரடி முதலீடு குறைவு ஆகியவை ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதற்கு காரணமாக உள்ளன. குறிப்பாக கடந்த 10 நாட்களாக ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதனை உடனடியாக கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு நேற்று கேட்டுக் கொண்டது. எனினும் இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, 22 காசுகள் சரிந்து, 72. 91 ரூபாயாக இருந்தது. இதுவும் இதுவரை இல்லாத சரிவாகும்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close