வாட்ஸ்ஆப்பில் ஸ்வைப் செய்தால் உடனடியாக ரிப்ளை செய்யும் புதிய ஆப்ஷன் ஒன்று வரவுள்ளது.
உலகில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ் ஆப்பில் ஸ்வைப் செய்தால், உடனடியாக பதில் அனுப்பும் ஆப்ஷன் அப்டேட் ஆக உள்ளது. அதாவது வாட்ஸ்ஆப்பில் யாரேனும் மெசேஜ் செய்தால், அதற்கு பதில் அனுப்ப, அந்த மெசேஜை ஸ்வைப் செய்தால் அதற்கான ரியாக்ஷனை நீங்கள் தேர்வு செய்து உடனடியாக பதில் அனுப்பலாம். தற்போது ரிப்ளை செய்வதை விட இது வேகமாக இருக்கும்.
இந்த அப்டேட் ஏற்கனவே ஐஒஎஸ் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து டார்க் மோட் ஆப்ஷனும் (Dark Mode feature)ஆண்டிராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வாட்ஸ்ஆப்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
newstm.in