செப்டம்பரில் ரூ.94,442 கோடி ஜிஎஸ்டி வசூல்!

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 06:06 pm
gst-mop-up-rises-to-rs-94-442-crore-in-september

கடந்த செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதிலும் ரூ.94,442 கோடி ஜிஎஸ்டியால் வசூல் ஆனதாக மத்திய நதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ரூ.94,442 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாதத்தின்படி இந்த வசூல் தொகை ரூ.93,690 கோடியாக இருந்தது.

சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் தொகை ரூ.15,318 கோடியும், எஸ்ஜிஎஸ்டி எனப்படும் மாநிலங்களால் வசூலிக்கப்படும் தொகை ரூ.21,061 கோடியும், ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.50,070 கோடியும், செஸ் வரியாக ரூ.7993 கோடியும் வசூலாகி உள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி வரி 2017-ம் ஆண்டு ஜூலை 1ல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என எல்லா மறைமுக வரிகளும் ஒன்றிணைக்கப்பட்டு 'ஒரே நாடு ஒரே வரி' என்பதன் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close