சன் டைரக்ட் டிவி நிறுவனம் பணியாளர்களுக்கு பணிக்கொடைக்கு  வட்டி அளிக்க உத்தரவு!!

  சுஜாதா   | Last Modified : 02 Oct, 2018 07:36 am

sun-direct-tv-has-to-give-gratuity-with-interest

மத்திய தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் உத்தரவின் படி சன் டைரக்ட் டிவி நிறுவனம் தன்னிடம்  பணிபுரியும் 95 பணியாளர்களுக்கு தாமதமாக பணிக்கொடை(Gratuity) அளித்ததற்காக  பணிக்கொடைக்கு வட்டி அளித்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள  மத்திய தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் (மத்திய) பணிக்கொடை செலுத்துதல் சட்டம், 1972-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதியின் படி மாநிலம் முழுவதிலும் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 22.9.2017 அன்று தொழிலாளர் அமலாக்க அதிகாரி திரு. சங்கர ராவ் நல்லா அப்படிப்பட்ட ஆய்வினை சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில் மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சன் டைரக்ட் டிவி நிறுவனம் தனது தொழிலாளர்கள் 95 பேருக்கும் பணிக்கொடையை தாமதமாக செலுத்தியுள்ளது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.

அதில் தாமதமாக அளிக்கப்பட பணிக்கொடைக்கு வட்டி கணக்கிடப்பட்டு  அந்த வட்டி 95 பணியாளர்களுக்கும் பிரித்து தரப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சன் டைரக்ட் டிவி நிறுவனம்  ரூ.2,01,441/- ஐ  வட்டியாக அந்த 95 பணியாளர்களுக்கும் பிரித்து சன் டைரக்ட் டிவி நிறுவனம் தரவேண்டும் என்று மத்திய தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தும் விதத்தில் இந்த வட்டி தொகைக்கான வரைவோலையை சன் டைரக்ட் டிவி நிறுவனம் அந்த பணியாளர்களுக்கு அளித்தது.

இதில் 15 தொழிலாளர்களுக்கு ரூ.30,300/- மதிப்புடைய வரைவோலையை மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் திரு. வி. முத்து மாணிக்கம் இன்று (01.10.2018)  அளித்தார். சன் டைரக்ட் டிவி நிறுவனத்தின் மூத்த மேலாளர் (மனித வளம்) திரு. பரணீதரன் மற்றும் தொழிலாளர் அமலாக்க அதிகாரி திரு. சங்கர ராவ் நல்லா ஆகியோரும் உடன் இருந்தனர்.

மீதமுள்ள 80 பணியாளர்களும் மத்திய தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தை அணுகி அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சமர்ப்பித்து அவர்களுக்கான வட்டியை பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.