வருமான வரித்துறை செலுத்துவோரின் அபரிமிதமாக அதிகரிப்பு! பின்னணி என்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Oct, 2018 09:29 pm
number-of-crorepatis-up-by-60-in-india

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 1.40 லட்சமாக அதிகரித்து, 60% உயர்ந்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியை பா.ஜ.க. கருப்பு பண எதிர்ப்பு நாளாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரலாற்றின் கருப்பு நாளாகவும் அனுசரித்தன. இன்று வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதாவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களின் மீது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகப்போகின்றன. மோடி தலைமையிலான மத்திய அரசு, கருப்பு பணத்தை ஒழிக்கவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு, உண்மையான வருமானத்தை வெளியிடுவோர் எண்ணிக்கையும் மிகமிகக்குறைவு.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. அதாவது இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறும் தனிப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48,416ல் இருந்து 81,344 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைப்பிறகு தங்களது உண்மையான வருமானத்தை வெளிச்சொல்ல பலர் முன்வந்துள்ளனர். கடந்த 2014-2015ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 88,649ஆக இருந்தது. இது 2017-2018ஆம் ஆண்டில் 1,40,139 ஆக அதிகரித்துள்ளது. இது 60சதவீத வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close