எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல் !

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 08:09 pm
rs-20000-withdrawal-limit-for-sbi-customers-effective-from-tomorrow

இன்று (அக்.31)  முதல் கிளாசிக், மேஸ்ட்ரோ வகை டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே எடுக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒருநாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை 40 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக இம்மாத தொடக்கத்தில் ஸ்டேட் வங்கி அறிவித்திருந்தது. இதன்படி கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான இந்தக் குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை ஆகியவற்றை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close