ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 04:30 pm
gst-collection-surges-to-over-rs-1-lakh-crore-in-october

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஒரே வரியாக கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் 'ஜிஎஸ்டி' அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வசூல், தனது இலக்கை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், "2018ம் ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பினாலும், குறைந்த வட்டி மற்றும் குறைந்த வரி ஏய்ப்பு ஆகியவையே  ஜிஎஸ்டி வெற்றி பெற்றதற்கு காரணம்" என குறிப்பிட்டுள்ளார். 

— Arun Jaitley (@arunjaitley) November 1, 2018

முன்னதாக இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close