மனிதக்கழிவுகளை உரமாக மாற்றும் நவீன கழிப்பறைத்தொட்டி: அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 12:59 pm
bill-gates-unveils-futuristic-toilets-in-china

சீனாவில் புதிய தொழில்நுட்பத்துடனான கழிப்பறை பற்றிய நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் உரையாற்றினார். அவர், கழிப்பறையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கழிப்பறை பற்றிய கண்காட்சி(Reinvented Toilet Expo) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், அவர் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கழிப்பறைத் தொட்டியை அறிமுகப்படுத்தினார். 

பின்னர் அவர் உரையாற்றிய போது, "நாட்டில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் பலர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. எனவே இதற்கு எதிராக புதிய தொழில்நுட்பம் கொண்ட கழிப்பறையை கொண்டுவர வேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. 

இறுதியாக ஒரு புதிய கழிப்பறைத்தொட்டி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மனிதக்கழிவுகளை அகற்ற தண்ணீர் தேவையில்லை. இதில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனம், மனிதக்கழிவுளை உரமாக மாற்றி விடும். மேலும், இதனை எந்த பாதாள சாக்கடையுடன் இணைக்க தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு கழிப்பறை தான் தேவை என்றும் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close