குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஜி.எஸ்.டி-யின் சிறப்பு உதவி மையங்கள்

  சுஜாதா   | Last Modified : 08 Nov, 2018 08:10 am
gst-special-helpdesks-for-micro-small-and-medium-enterprises

* திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் எம்.எஸ்.எம்.ஈ-க்கு ஜி.எஸ்.டி சிறப்பு உதவி மையங்கள்
* திருவள்ளுர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தொழிலுக்கும், வேலூர் மாவட்டத்தில் தோல் பொருள் தொழிலுக்கும் உதவி மையம்
* ஜி.எஸ்.டி தொடர்பான பிரச்சினைகள் குறித்து எம்.எஸ்.எம்.ஈ சம்பந்தப்பட்டோர் அடுத்த 100 நாட்களுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் 
* இந்த மாவட்டங்களில் சிறப்பு உதவி நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது

 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை மத்திய அரசு 02.11.2018 அன்று நாடு முழுவதும் 80 மாவட்டங்களில் தொடங்கியது.  இதன் ஒரு பகுதியாக ஜி.எஸ்.டி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்ய ஜி.எஸ்.டி-யும், மத்திய கலால்துறையும் திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் ஜி.எஸ்.டி உதவி மையங்களை அமைத்துள்ளன.

வரி செலுத்துதல், வரிக்கான கடன் கிடைக்கச் செய்தல், ஜி.எஸ்.டி வரியில் திரும்பக் கோருவதற்கான முறைகள் ஆகியவற்றில் நுட்பமானப் பிரச்சினைகளை அறிவதற்கு இந்த மையங்களின் அதிகாரிகள் உதவி செய்வார்கள்.  அடுத்த 100 நாட்களுக்கு இந்தத் தொழில் பிரிவுகள்  கூடுதல் வரியை திரும்பப் பெறுவதற்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.  எம்.எஸ்.எம்.ஈ வர்த்தக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த இரண்டு மாவட்டங்களிலும் சிறப்பு உதவித் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவள்ளுர் அலுவலக முகவரி: எண் 46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளுர் – 602 001.  தொலைபேசி எண்: 044-2621 5765, மின்னஞ்சல் Smisha.Rajan@icegate@gov.in
பூந்தமல்லி கோட்ட அலுவலக முகவரி: சி-48, 2-வது அவென்யூ, முதல்தளம், அண்ணாநகர், சென்னை – 600 040. தொலைபேசி எண்: 044-2621 5765, மின்னஞ்சல் pmle-divnouter-tn@gov.in
வேலூர் கோட்ட அலுவலகம்: மத்திய வருவாய் கட்டடம், பாரக் மைதான், ஆபீசர்லைன், வேலூர்-632 001. தொலைபேசி எண்: 0416-2221387. மின்னஞ்சல் supdt-vlrdtech@nic.in
ராணிப்பேட்டை கோட்ட அலுவலகம்: சிப்காட் தொழிற்பேட்டை, ராணிப்பேட்டை-632 403. தொலைபேசி எண்: 04172-244547. மின்னஞ்சல் Rpt-div-tn@gov.in

 

ஜி.எஸ்.டி. தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் அனைத்து வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள் 044 2614 2850 / 51 / 52 / 53

மின்னஞ்சல் http://Sevakendra-outer-tn@gov.in

இந்தத் தகவலை ஜி,எஸ்.டி ஆணையர் திரு ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close