பி.எஸ்.என்.எல்-ன் தனலட்சுமி தள்ளுபடி திட்டம் நீட்டிப்பு

  சுஜாதா   | Last Modified : 08 Nov, 2018 08:23 am
bsnl-has-extended-its-dhanalakshmi-discount-scheme-for-its-customers-up-to-23rd-november-2018

பி.எஸ்.என்.எல்-ன் நிறுவனம், தனலட்சுமி தள்ளுபடி திட்டத்தை நவம்பர் 23, 2018  வரை நீட்டித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, 07.11.2018 முதல் 23.11.2018 வரை தங்களின் தற்போதைய தொலைபேசி, ப்ராட்பான்ட் மற்றும் செல்பேசி கட்டணங்களை செலுத்தும் பி.எஸ்.என்.எல்  வாடிக்கையாளர்கள், அவர்கள் செலுத்தும் தொகையில் ஒரு சதவீதம் தள்ளுபடியாக கணக்கிடப்பட்டு, அடுத்துவரும் கட்டண தொகையில் கழித்துக் கொள்ளப்படும். எண்டர்பிரைசஸ் வாடிகையாளர்களுக்கு 2 சதவீதம், வருங்கால கட்டணங்கள் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்துவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடி ஆகிய சலுகைகள் தொடரும் என்று பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டத்தின், சென்னை தலைமை பொதுமேலாளர் திரு. வி. ராஜூ பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close