வாட்ஸ் ஆப்பில் தவறான செய்தியை பரப்பினால் கடும் தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 11:49 am
beware-big-punishment-if-you-send-a-fake-news-on-whatsapp-facebook-is-watching

'வாட்ஸ் ஆப்'பில் தவறான தகவல் பரப்பப்படுவதை தடுக்க, அந்நிறுவனம் 20 குழுக்களை அமைத்துள்ளது. 

உலகில் தகவல் தொடர்பில் முக்கிய பங்காற்றுபவை சமூக வலைத்தளங்கள். அதிலும், வாட்ஸ் ஆப்பை கோடிக்கணக்கானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனமும் அதற்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை அளித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில், வாட்ஸ் ஆப்களில் தவறான தகவல் பரவி வருகிறது என்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 

 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தியால், அப்பாவி பொதுமக்கள், 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் இதனை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கும்படி,  வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்நிறுவனம், வாட்ஸ் ஆப்பில் வெளியாகும் தகவல்களை சரிபார்க்கவும், கண்காணிக்கவும், சர்வதேச அளவில், 20 குழுக்களை அமைத்து,  உத்தரவிட்டுள்ளது. இந்த குழுக்களில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவில், 'வாட்ஸ் ஆப்' செய்திகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், பெங்களூரைச் சேர்ந்த, அனுஷி அகர்வால், நிஹல் பஸ்சன்ஹா ஆகியோரும், 'லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ்' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, சகுந்தலா பனாஜி, மாரா, ராம்நாத் பட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதன்படி, வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பகிரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்  என தெரிவிக்கப்படுகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close