வரும் தேர்தலிலும் மோடி பிரதமரானால் நல்லது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 07:34 pm
narayana-murthy-praises-pm-modi-says-continuity-will-be-a-good-thing

பிரதமர் நரேந்திர மோடி ஊழலை எதிர்த்து பல நடவடிக்கைகளை தனது ஆட்சியில் எடுத்து வருவதாகவும், வரும் பொதுத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றால் நல்லதாக அமையும் என்று இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். 

இந்த வாரம் அவர் பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.  மேலும் அவர் கூறுகையில், ''பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசில் உள்ள அவரது அமைச்சர்கள் ஊழலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்த அரசு மீது எப்போதாவது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் வருகின்றன. 

அப்போது, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்புகையில்,  ''அந்த ஒப்பந்தம் குறித்த தரவுகளின் சரியான விவரங்கள் கிடைக்காததால் அது உன்மையா என்று தெரியாது'' என்று பதில் அளித்தார். 

மேலும், அரசு மற்றும் ஆர்பிஐ உள்ளிட்ட உள்ளிட்டவைகள் இடையில் உள்ள பிரச்னை குறித்துக் கேட்டபோது இந்த நிறுவனங்கள் எல்லாம் வலுவாக இருக்க வேண்டும். அப்படி, வலிமையின்றி இருந்தால் சிக்கல் தான் என்றும் அதே போல, சிலைகள் மற்றும் கோவில்கள் போன்றவற்றுக்கு அரசு செலவு செய்வதில் மோடி கவனம் செலுத்தக் கூடாது என்று கூறினார். 

ஜிஎஸ்டி மற்றும் திவால் சீர்திருத்த சட்டம்..

ஜிஎஸ்டி வரி மற்றும் திவால் சட்ட சீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகள் வலுவான பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான எண்ணம் உடையது, அதற்கான பணிகள் சரியாக நடைபெறவில்லை என்பதற்காக நாம் மோடியை குறை கூறக்கூடாது.   

தூய்மை இந்தியா: 

நாடெங்கும் உள்ள அமைத்து கிராமங்களையும் மோடியால் சென்று சுத்தம் செய்ய முடியாது. அவர் சார்பாக இதனை செய்பவர்கள் தாமதம் தான் அது. மேலும், இந்தியர்களின் மனப்போக்கு மற்றும் ஆன்மாவில் தான் பிரச்சனை உள்ளது. நாம் கருணையற்று, ஒழுங்கற்று இருக்கிறோம். பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு முன்பு நாம் அவசரமாக நமது கலாச்சாரத்தினை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

கடந்த 5 வருடத்தில் மோடி தேசம், ஒழுக்கம், சுத்தம், பொருளாதார இலக்கு என்று அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார். இத்தகைய தேசிய தலைவரைப் பெற்றதற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close