வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் அப்பிளிக்கேஷன் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Nov, 2018 06:34 pm
apple-deleting-all-whatsapp-stickers-apps-from-app-store-report

அறிமுகம் செய்து சில தினங்களிலேயே ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து ஸ்டிக்கர்ஸ் வசதி நீக்கப்பட்டுள்ளது.  

உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் வாட்ஸ் அப் அண்மையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல்களில் ஸ்டிக்கர்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்து சில தினங்களிலேயே ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து ஸ்டிக்கர்ஸ் வசதி நீக்கப்பட்டுள்ளது.  

பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் ஏற்கனவே ஆப்ஸ் ஸ்டோரில் இருப்பதால் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவை நீக்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் செயலிகள் இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பினை கொண்ட செயலியாக இருக்கின்றன எனவே நீக்கம் செய்யப்பட்டுள்ளது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் பயனர்கள் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஸ்களிலிருந்து ஸ்டிக்கர்ஸ்களை பெற முடியாமலும், வாட்ஸ் அப்பின் ஸ்டிக்கர் சேவையை பயன்படுத்த முடியாமலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close