போலி ஈ-மெயில்களை நம்பவேண்டாம்... ஐஓசி எச்சரிக்கை!!  

  சுஜாதா   | Last Modified : 26 Nov, 2018 01:08 am

public-notice-to-caution-against-online-fraudulent-offers-and-fake-mails-demanding-money-being-triggered-to-persons-registered-in-www-lpgvitrakchayan-in


ஐஓசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணையதள மோசடி மற்றும் போலி ஈ-மெயில்கள் குறித்து எச்சரித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

போலி முகவர்கள் மூலமாக www.ujjwaladealer.com; www.lpgvitrakchayan.org; www.ujjwalalpgvitarak.org மற்றும் www.indanelpg.com – என்ற பெயரில் ஏராளமான போலி இணையதளங்கள் உருவாக்கப்படுவதாக எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபடும் இந்த முகவர்கள், பிரதமரின் உஜ்வாலா யோஜனா அல்லது ராஜீவ்காந்தி கிராம எல்பிஜி விதாரக் யோஜனா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களாக நியமனம் செய்து போலியான வணிக வாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

அப்பாவி விண்ணப்பதாரர்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளத்தின் வரைபடமும், முகவரியும் அசலான இணையதளத்துடன் www.lpgvitrakchayan.in – ஒத்துப்போவது போல் அமைத்துள்ளனர்.

போலியான இணையதளங்கள், அப்பாவி மக்களை குறி வைத்து அவர்களுக்கு, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களில் – இந்தியன் ஆயில் நிறுவனம் / இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் / பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றிலிருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்களைப்போல தகவல்கள் அனுப்பி, பெருமளவில் பணத்தை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் பெயரில் வசூல் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின்  அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது www.lpgvitrakchayan.in என்ற இணையதளத்தில் உறுதியான தகவலை சரிபார்த்து, தொடர்பு கொள்ள வேண்டும் என்று அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.