சணல் பொருளை கட்டாயமாக பயன்படுத்தும் விதிமுறைகள் நீட்டிப்பு 

  சுஜாதா   | Last Modified : 27 Nov, 2018 08:15 am
extension-of-norms-for-mandatory-packaging-in-jute-materials

1987-ஆம் ஆண்டு சணல் பொருட்கள் சட்டப்படி, சணலை விவசாயப் பொருட்களை கட்டி எடுத்துச் செல்வதற்கு, கட்டாயமாக பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை நீட்டிக்க  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

இதன்படி, 100 சதவீதம் உணவு தானியங்கள் மற்றும் 20 சதவீதம் சர்க்கரை கண்டிப்பாக மாறுபட்ட சணல் பைகளில் அடைத்து அனுப்பப்பட வேண்டும்.

சர்க்கரையை சணல் பையில் அடைத்து அனுப்புவது, சணல் தொழிலுக்கு உதவும். துவக்கத்தில் உணவு தானியங்களை அடைத்து அனுப்புவதற்கான 10 சதவீத சணல் பைகள், ஜெம் இணையதளத்தின் மூலம் தரப்படும்.

தாக்கம்:

*  மத்திய அரசின் இந்த முடிவு சணல்துறை மேம்பாட்டிற்கு உத்வேகம் அளிக்கும். சணல் உற்பத்தி மற்றும் அதன் தரம் மேம்படுவதோடு சணல் பொருட்களுக்கு தொடர்ந்து தேவை ஏற்படும்.

*  சணல் தொழிலில் 3.7 லட்சம் தொழிலாளர்களும், பல லட்சம் குடும்பங்களும் ஈடுபட்டுள்ளதால், இது அவர்களது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

*  சணல் தொழில்துறை பெரும்பாலும், அரசு துறைகளைச் சார்ந்தே இருப்பதால், ஆண்டுக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் அளவிலான சணல் பைகள், உணவு தானியங்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.

*  இது, சணல் தொழில் தொடர்ந்து நடைபெற உதவுவதோடு அதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிப்பதாகவும் அமைகிறது.

*  மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலாயா, திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயனளிக்கும்.

சணல் துறைக்கான அரசு ஆதரவு நடவடிக்கைகள்:

*  தரமான மற்றும் மேம்பட்ட சணலை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், மத்திய அரசு லட்சக்கணக்கான சணல் விவசாயிகளுக்கு பல வகையிலும், உதவி வருகிறது. சணல் பயிரிடுவதற்கு உண்டான ஆலோசனைகள், முறைகள், விதைகள் தூவும் முறை, களை நீக்குவது மற்றும் தரமான சான்றிதழ் அளிக்கப்பட்ட விதைகளை  விவசாயிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல உதவிகள் செய்யப்படுகின்றன. இதனால், சணல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு கூடுதலாக 10,000 ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

*  சணல் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, இந்திய சணல் கழகத்திற்கு மத்திய அரசு இந்த நிதியாண்டிற்கும், அடுத்த நிதியாண்டிற்கும் 100 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. சணலுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து செயல்படுத்துவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

*  உள்நாட்டில் சணல் தேவையை அதிகரிக்க வசதியாக பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சணல் பொருட்கள்மீது மத்திய அரசு திட்டமிட்ட, சணல் பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை விதித்துள்ளது. இதனால், ஆந்திரப் பிரதேசத்தில் 13 சணல் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி, சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர். இதனால், உள்நாட்டில் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன்  சணல் பொருட்களுக்கு கூடுதல் தேவையும் ஏற்பட்டுள்ளது.

*  சணல் துறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்காக JUTE SMART என்ற  மின்னணு ஆளுமை முயற்சி 2016 டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது. இந்திய சணல் கழகம், சணல் விவசாயிகளிடையே கொள்முதல் செய்யும் சணலுக்கு உண்டான பணத்தை 100 சதவீதம் இணையதளம் வாயிலாகவே செலுத்தி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close