தினமும் குறையும் பெட்ரோல்-டீசல் விலை ! காணாமல் போன எதிர்க்கட்சிகள் !!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 04:22 pm
fuel-price-touches-its-lowest-this-financial-year-here-s-how-modi-govt-succeeded-in-reducing-the-fuel-price

கடந்த சில நாட்களாகவே மோடி தலைமையிலான மத்திய அரசு என குறைகூற எதிர்க்கட்சிகளுக்கு எந்த விவகாரமும் கிட்டவில்லை. அதற்கு முக்கியக் காரணம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. அதனால் இதுவரை குறைபேசி வந்த எதிர்க்கட்சிகளும் அதன் ஆதரவு ஊடகங்களும் தற்போது வாயடைத்து போயுள்ளன. இதுவரை இல்லாத தொடர் விலைக் குறைவைப் பற்றி எந்தக் கட்சிகளும் எந்த ஊடகங்களும் ஒரு முறைக் கூட வாய்த் திறக்கவில்லை. 

கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை 8 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற 6 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைந்துள்ளது. டீசல் ரூ.8 குறைந்துள்ளது. தொடந்து பத்தாவது நாளாக இன்று விலை குறைந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71.44 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 65.93 ஆகவும் உள்ளது. 

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரே மாதத்தில் 30 சதவீதம் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம். 

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84க்கும டீசல் ரூ.75.45க்கும் விற்பனையானது. 

ஆனால் இதற்கு மறு தினமே அமத்திய நிதி அமைச்சகம் கலால் வரியை குறைத்தது. அதே போல மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை குறைக்க வலியுறுத்தியது. மாநில அரசுகளும் அரசு சார் பெட்ரோல் விநியோகஸ்தர்களும் லிட்டருக்கும் ரூ.1 என்ற வகையில் பெட்ரோல், டீசல் விலையில் இழப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூ.5 குறைந்தது. மேலும், கச்சா எண்ணெய் விலை சரிவும் இவை இரண்டின் விலையில் மேலும் பிரதிபலித்தது. 

கச்சா எண்ணெய் விலை சரிந்தது இந்திய சந்திக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது . ஏனெனில் இந்தியா 80 சதவீத கச்சா எண்ணெயைய் கொள்முதல் செய்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைவால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.

கடந்த அக்டோபம் மாதம் 11ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவாக, 74 ரூபாய் 48 காசுகள் அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்தது.

இந்தச்சூழலில், பன்னாட்டு அளவில், கச்சா எண்ணெய் உற்பத்தி விலை சரியத் தொடங்கியதால், எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா வழங்கும் அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்தது. இதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது.

ஆனால், இப்போது இத்தகைய முன்னேற்றம் குறித்து எந்த ஊடகங்களும் தர்மம் பேசவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலை விலை உயர்வுக்கு காரணம் மோடி அரசு தான் என குறைகூறும் எதிர்க்கட்சிகள் தற்போது வாய் மூட்டி இருக்கின்றன.பெட்ரோல் மற்றும் டீசலை விலை என்பது கச்சா எண்ணெய் விலையை சார்ந்தது என்று தெரிந்தும் அரசியல் நோக்கத்தோடு மத்திய அரசை குறைகூறும் வாடிக்கையை எதிர்க்கட்சிகள் தங்களது செல்லாக் காசுக்கான வாடிக்கையாகவே வைத்துள்ளனர். 

Newstm

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close