2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 11:18 am

half-of-atms-may-be-shut-down-by-march

2019 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள ஏ.டி.எம்களில் 50% ஏ.டி.எம்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் ஆன்லைன் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறது. சமீபத்தில் ஏ.டி.எம் தொடர்பான விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் ஏ.டி.எம் பயன்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததும் ஏ.டி.எம் பயன்பாட்டின் குறைவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.  இதனால் பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்காத நிலையில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஆன்லைன் பணபரிவர்த்தனைகளும் அதிகமாகி வருகின்றன. மேலும், தற்போது ஏ.டி.எம் இயந்திரங்களில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப முறைகளுக்கு கூடுதல் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் பெரும்பாலான ஏ.டி.எம்களை மூட வேண்டும் என ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. நம் நாட்டில் இப்போது 2.38 லட்சம் ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2019 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதுமாக 1.13 ஏ.டி.எம் எந்திரங்களின் (தற்போதைய மொத்த எண்ணிக்கையில் இது சுமார் 50 சதவீதம்) சேவை மூடப்படும். 

இவற்றில் சுமார் 1 லட்சம் ஏடிஎம்கள் வங்கி கிளை இல்லாத இடங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ளவை. மேலும், 15,000 ஏடிஎம்கள் வங்கி அல்லாத வேறு நிறுவனங்களால் நடத்தப்படுபவை. 

ஏ.டி.எம் மையங்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைவதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் உருவாகும். அனைவருக்கும் நிதி சேவை கிடைக்காமல் போகும் சூழ்நிலையும் உருவாகும். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.