உச்சத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 04:57 pm
sensex-rallies-620-points-to-35-770-nifty-crosses-10-700-level

கடந்த வாரத்தில் பங்குச்சந்தை படுசரிவை சந்தித்த நிலையில் தற்போது ஏற்றம் கண்டு வருகிறது.

மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 630 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலை 35,277.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் 35,779.07 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 10,591.00 என்ற புள்ளிகளில் தொடங்கி, நிஃப்டி 188.45 புள்ளிகள் குறைந்து, 10,737.60  என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

ஹீரோ மோட்டோ கார்ப், சன் பார்மா, பவர் கிரிட், எஸ் பேங்க் என பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன. 

நேற்று முன்தினம் ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து,  சக்திஹந்தா தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. நேற்று புதிய கவர்னர் நியமிக்கப்பட்டதும் இன்று பங்குச்சந்தை ஏற்றத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close